பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.-சமுத்திரம் 49 "ஸார், இன்னுமொரு முக்கியமான விஷயமுங்க. நம்ம சேர்மென் ஒரு கல்யாணத்துக்குப் போறாராம்." "போவட்டுமே "அதில்லீங்க, நம்ம ஜீப்பை கேக்கிறாரு." "அதெப்படி? கலெக்டருக்கு வேணுமே?" "நான் சொல்லிப் பார்த்துட்டேனுங்க, அவரு கேக்கல." " இதென்ன பெரிய ரோதனையால் போச்சே." "சேர்மன் சுத்த மோசம் சார், இன்னைக்குப் பார்த்துக் கேக்கறாரு." "உம், சேர்மனுக்கு ஜீப்பைக் கொடுத்துக் கல்யாணத்துக்குப் போகச் சொல்லு. அவங்க அவங்க தலை விதிப்படி நடக்கட்டும்." "கலெக்டர் வரும்போது எப்படி சார் ஜீப்பைக் கொடுக்கிறது?" "இந்தாய்யா மானேஜரு கலெக்டரைப் பகைச்சா அவன் ஜில்லாவுக்குள்ளே தான் மாத்துவான். சேர்மனைப் பகைச்சா, அவரு ஜில்லாவுக்கு வெளியே மாத்திடுவாரு பேசாம ஜீப்பைக் கொடுத்திடும்." - அரசாங்க ஒய்வு விடுதி ஒய்வின்றிக் கலகலத்தது. தாசில்தார், அவருடைய 'கான்ஃபிடண்ட் குமாஸ்தா பண்டாரம், கமிஷனர், பஞ்சாயத்துத் தலைவர்கள், சில கிராம சேவகிகள் ஆகிய பல நபர்கள், கலெக்டர் தங்கி இருந்த அறையின் திரைச் சீலையை லேசாக விலக்கி விலக்கிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். உள்ளே ஒரு பெண் பிரசவ வேதனையில் துடிக்கிறாள் என்றும் இவர்கள் வெளியே நிற்க முடியாமலும் உள்ளே போக முடியாமலும் தத்தளிக்கிறார்கள் என்றும் விஷயம் தெரியாதவர்கள் நினைத்துக் கொண்டால் அதில் தப்பில்லை ட வாலி பியூன் திரைச் சீலைக்கு வெளியே தர்பார் நடத்திக் கொண்டிருந்தான். "ஏம்ப்பா, ஆர்.டி.ஓ. பிரமோஷன் பைலில் ஐயா கையெழுத்துப் போட்டுட்டாரா?" என்றார் தாசில்தார், பியூனைப் பார்த்து. (5.1 Jft. Lt-- -