பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 குற்றம் பார்க்கில் © "இந்த ஊரிலே நல்ல அரிசி கிடைக்குமாமே?" என்று அவன் பதில் சொன்னான். "என் பைல் எந்த நிலையில் இருக்குதுப்பா?" "ஏன் சார், இந்த ஊர்ல அல்வா கூட ரொம்ப விசேஷமாமே?" "பண்டாரம், இவரு சொல்றதை நோட் பண்ணிக்கோ. ஏம்ப்பா, பைல் எப்படி இருக்கு சொல்லு," மு "ஐயா நல்ல osta, இருக்கும்போது மேலே எடுத்து வச்சிடறேன். டோண்ட் ஒர்ரி சார். இந்த ஊர் அரிசியைச் சும்மா சொல்லக் கூடாது சார், மல்லிப்பூ." இப்போது பஞ்சாயத்து யூனியன் கமிஷனர் நெளிந்து கொண்டும், கொஞ்சம் உரிமையோடும், "இந்தாப்பா முனுசாமி, என்னை மாத்தப் போறாங்களாமே உண்மையா?" என்றார். அவன் அவருக்கு உடனே பதிலளிக்கவில்லை. ஒரு காலத்தில் வேறு ஓர் ஊரில் இவரிடம் பியூனாக வேலை பார்த்த போது என்ன பாடு படுத்தினார் என்பதை நினைத்துக் கொண்டான். கமிஷனர் பழையதை மறந்து புதிய முறையில் குழைந்தார். "டோன்ட் ஒர்ரி ஸ்ார். உங்களை மாத்துறதா நாங்க இன்னும் தீர்மானம் எடுக்கல," என்றான் பியூன். - திடீரென்று எல்லோரும் உஷாரானார்கள். திரைச்சீலை அசைந்தது. கலெக்டர் - வடநாட்டுக்காரர் - வெளியே வந்தார். வயது முப்பது மதிக்கலாம். "ஐ ஆம் தாசில்தார், ஹி இஸ் கமிஷனர்," என்றார் தாசில்தார். -: “8 શ્ન கமிஷனர். ஹி இஸ் தாசில்தார்," என்றார் ஆணையாளர். - "ஐ n " என்றார் கலெக்டர். பிறகு "ரெடியா?" என்றார். "ரெடி Gnomir. எல்லா பைல்களையும் கொண்டு வந்திருக்கேன்." கமிஷனர் அனலிலிட்ட மெழுகானார். டவாலி இடைமறித்தான். "ஐயா பைலுங்களைக்