பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 51 கேட்கவில்லை. சாப்பாடு ரெடியான்னு கேக்குறாரு. அறிமுகத்திற்கு அந்தஸ்தில்லை என்பதுபோல ஒதுக்கப் பட்ட குமாஸ்தா பண்டாரம் குறுக்கே புகுந்தான். "ஐயாவுக்கு மட்டன் வேனுமா? சிக்கன் இஷ்டமா? ஒரே நிமிஷத்துல கொண்டாந்துடுறேன்." கலெக்டர் கண்களை மூடித் திறந்தார். "ரெண்டும் வேணும்" என்றார். "எல்லா பைல்ஸும் ரெடி" என்றார் கமிஷனர் மறுபடி அரைக் கண்களாலேயே கலெக்டர் அவரை எரித்தார். "ஜீப் கொடு. ஊரைச் சுத்திப் பார்த்துட்டு வர்றேன்" என்றார். கமிஷனர் தவித்தார். "ஜீப் சேர்மன்.ரிப்பேர்..." "ஜீப் ரிப்பேர், ஆர் சேர்மன் ரிப்பேர்?" "ஸ்ார். வந்து. ஜீப்பை நோ நோ. சேர்மனை யெஸ் யெஸ் சேர்மனை.ஜீப்பை..." "நீ என்னா சொல்றே? ஜீப் எங்கே?"தமிழைக் கற்று வரும் கலெக்டர் இன்னும் ஒருமையைத் தாண்டவில்லை. .இருதலைக் கொள்ளி எறும்பானார் கமிஷனர் אי "என்னா மேன்? ஜீப் எங்கு?" என்றார் கலெக்டர். "அங்கு, அதாவது சேர்மன் கோ," என்று கமிஷனர் இந்தியில் புகுந்தார் "நீ யூஸ்லெஸ் ஃபெல்லோ, ஜீப்பைக் கொடுத்திட்டே வெறி பாட். நான் ஊர் சுத்தணும்." தாசில்தார், ஆர்.டி.ஓ. ஆகப் பிரமோஷன் ஆகப் போகிறவர் சமயம் பார்த்துச் சொன்னார். - "என்ன கமிஷனர் சார், ஜீப் இல்லைன்னு என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, நான் கார் ஏற்பாடு செய்திருப்பேனே." கலெக்டர் தாசில்தாரைக் கனிவாகப் பார்த்துவிட்டுக் கமிஷனரிடம் கத்தினார். "யூ.யூ.நோ. யூஸ்" கத்திவிட்டு