பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தத் தொகுப்பிலுள்ள அத்தனைக் கதைகளும் இதன் வெளியீட்டு விழாவில் திரு. அகிலன், இவரைப் போல் எழுதியிருக்கிறார், அவரைப்போல் எழுதியிருக்கிறார் என்று கூறமுடியாத ஒரிஜினல்கள்' என்று கூறினார். 'மருந்தைக் குடிக்கும் போது குரங்கை நினைக்காதே' என்ற உபதேசத்தின் அடிப்படையில் இலக்கியமாக எழுதவேண்டுமென்று நினைத்து அதற்கு எதிர்மாறாக எழுத்தில் அடிப்பட்டுப்போகாத சிறுகதைகள், இந்தத் தொகுப்பிலுள்ள துணிச்சலான கதைகளை வெளியிட்ட தோடு, என்னை அவ்வப்போது உற்சாகப்படுத்தியதுடன் தாமரையில் வெளியிட்ட கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம் அவர்களையும், ஆனந்த விகடன். குமுதம் போன்ற பத்திரிகை களையும், இதனை அப்போது வெளியிட்ட கல்வி வெளியீடு' என்ற சின்னஞ்சிறு பதிப்பகத்தின் உரிமையாளர். புலவர் அன்பரசனையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். இந்தச் சிறுகதைத் தொகுப்புக்கும், 'ஊருக்குள் ஒரு புரட்சி என்ற நாவலுக்கும் தமிழக அரசின் பரிசு கிடைத்த அப்போது வாழ்த்துக் கள் வந்தாலும் அவை குவியவில்லை. ஆனால் மண்சுமை என்ற சிறுகதைத் தொகுப்புக்கு முதல் பரிசு கிடைத்த இப்போது வாழ்த்துக்கள் இன்னும்கூட குவிந்து கொண்டே இருக்கின்றன. அந்த அளவிற்கு இலக்கிய உலகில் நான் வளர்வதற்குக் காரண மானவர்களில் ஒருவரான மணிவாசகர் பதிப்பக உரிமையாள ரான பேராசிரியர் டாக்டர் ச. மெய்யப்பன் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாவற்றிக்கும் மேலாக ஆரம்ப எழுத்தாளனாக இருந்த என்னை நாடறிந்த எழுத்தாளனாக மாற்றிய அனைத்துப் பத்திரிகைகளுக்கும், ஆழமாக எழுத வைத்த செம்மலர் தாமரை ஆகிய பத்திரிகைகளுக்கும் வாசகப் பெருமக்களுக்கும் மனம் நெகிழ நன்றி செலுத்துகிறேன். இவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இன்னும் ஆழமாகவும், பரவலாகவும், மனித நேயத்தோடும் எழுதவேண்டுமென்று உறுதி பூணுகிறேன்.