பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னுரை இந்தச் சிறுகதைத் தொகுப்பு பத்திரிகைகளும் படைப்புக்களும் புனிதமாகக் கருதப்படவில்லையென்றாலும், போற்றுதற்குரியவை யாகக் கருதப்பட்ட ஆண்டில் வெளியானது. இதுதான் எனது முதல் படைப்பு. ஆனந்தவிகடன். குமுதம், தாமரை ஆகிய பத்திரிகைகளில் வெளியானவை இந்தக் கதைகள். ஒரு புத்தக வடிவில் இந்தத் தொகுப்பை நான் பார்த்த போது புல்லரித்துப் போனேன்; புளகாங்கிதமடைந்தேன். சென்னை நூலகக் கட்டி டத்தில் எனது இனிய நண்பரும், செங்கை மாவட்ட அப்போதைய ஆட்சித் தலைவருமான மறைந்த திரு. திவான்முகம்மது தலைமையில், அப்போது காங்கிரஸ் செயலாளராய், பிரபலமாக விளங்கியவரும் என்றுமே என் இனிய தோழருமான திரு. ஏ.கே.சண்முகசுந்தரம் இந்த நூலை வெளியிட்டார். பிரபல நாவலாசிரியர் அகிலன் எனது குடும்பத் தோழர் திரு.கே.சி.எஸ். அருணாசலம், நாவலாசிரியர் திரு. நா. பார்த்தசாரதி போன்ற ஆன்றோர்களும் சான்றோர்களும் வாழ்த்தியருளினார்கள். திரு. நா.பா. அவர்கள் தனது தீபம் பத்திரிகையில் இந்தச் சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டுவிழா ஒரு மாநாடு போல் நடந்தது என்று குறிப்பிட்டார். இந்தப் படைப்புக்குத் தமிழக அரசின் முதல் பரிசும் கிடைத்தது. அப்போதைய முதல்வர் திரு. எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் 1981-ஆம் திருவள்ளுவர் திருவிழா ஆண்டு இந்தத் தொகுப்புக் கும் ஊருக்குள் ஒரு புரட்சி என்ற நாவலுக்கும் இரண்டு பரிசுகளை வழங்கினார். தமிழக அரசின் செய்தித்துறை நான் அவரிடம் பரிசு வாங்கிய புகைப்படத்தையும், சாலை இளந்திரையன் சார்பில் அவரது தங்கை வாங்கிய புகைப்படத்தை யும் ஆகிய இரண்டை மட்டுமே வெளியிட்டது. அப்படியும் மக்களின் வரிப்பணத்தில் வாங்கிய பணம் என்று மட்டுமே நான் குறிப்பிட்டேன். சம்பந்தப்பட்ட பத்திரிகைப் பேட்டியில் திரு. எம்.ஜி.ஆர். அவர்களை நான் குறிப்பிடாதது பலருக்கு வருத்தத்தைக் கொடுத்தது. திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் மீது மனிதர் என்ற முறையில் ஒரு மகத்தான மரியாதை உண்டு என்றாலும், எழுத்தாளன் பேனா தனிநபர் வழிபாட்டிற்குத் தாராளம் காட்டக்கூடாது என்ற கருத்தே அகற்குக்காரணம். இன்றளவும் அதே கருத்தைக் கொண்டிருக்கிறேன்.