பக்கம்:குற்றால வளம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

தீண்டத்தகாதார் யார்?

தீண்டத்தகாதார் யார்?


தீண்டத்தகாதார் யார் என்பதைப்பற்றி ஈண்டு ஆராயலாம். தீண்டத்தகாகார் எனப் பிறப்புப்பற்றி ஒரு பிரிவார் ஹிந்துக்களுள் பெரும்பாலாரால் ஒதுக்கப்படுகின்றனர். அது பிழையென்றும் பிறப்பினால் தீண்டத்தகாதார் உண்டு என்று உரைத்தல் பேதைமை என்றும் பேசும் கொள்கைகொண்ட ஒரு கூட்டத்தார் இந்நாள் நம் நாட்டில் பெருகிவருகின்றார், காந்தியடிகள் கோலிய ஒத்துழையாமைக் திட்டத்திலும் தீண்டாமை விலக்கு ஒரு முக்கியமான உறுப்பாக அமைக்கப்பெற்றது. அத் தீண்டாமை விலக்கு என்பது பிறப்பினால் ஒரு பிரிவார் தீண்டத்தகாதாராகக் கொள்ளப்படும் பொருளற்ற காரியத்தை நிறுத்துதல் என்ற பொருள்கொண்டே தெடங்கப்பட்டது.


"தீண்டாமையை விலக்குதல் என்றால் தீண்டத்தகாதாராக யாருமே கொள்ளப்படக் கூடாதன்றோ? அங்ஙனமாக, 'தீண்டத்தகாதார் யார்?' என்ற வினா எழவேண்டுவதென்னை? தீண்டத்தகாதார் யார் என்ற வினாவிலிருந்தே தீண்டத்தகாதாரும் உளரென்று கிடைக்கின்றதே. இது தீண்டாமை விலக்கிற்கு முரணன்றோ?" என்று எவரும் வினவலாம். தீண்டத்தகாகார்எவரும் இல்லையென்பது என் கருத்தன்று. தீண்டத்தகாதார் உள்ர். தீண்டாமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/107&oldid=1322959" இலிருந்து மீள்விக்கப்பட்டது