பக்கம்:குற்றால வளம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

99

 விலக்கு என்ற கொள்கை எனக்கு உடன்பாடல்ல வென்று இது கொண்டு யாரும் கூறிவிட வேண்டாம். அக்கொள்கையை அதி தீவிரமாக வலியுறுத்துவோர் கூட்டத்துள் நானும் சேர்ந்தவனே. தீண்டாமை விலக்கு என்பதற்கு இப பொழுது தீண்டத்தகாதாராகக் கொள்ளப்படும் மூடக்கொள்கையை விலக்கல் என்பதே பொருள். அதுவேயன்றித் தீண்டத்தகாத செயல்புரியும் ஒருவரை விலக்குவதில் என்னே பிழை.


இந்நாள் இந்து சமூகத்தினரால் தீண்டத் தகாதாராக யார் கொள்ளப்படுகிறார்? வழிவழியாக வரும் ஒரு கூட்டத்தார். பிறப்புப்பற்றி ஒரு வகையாரைத் தீண்டத் தகாதாராகக் கொள்ளப்படுவதற்கு என்ன நியாயம்? விவாத முறையில் அறிவு உலகம் ஏற்றுக்கொள்ளக் தக்கவாறு எவரும் இன்னோரன்ன மூட வழக்கங்கட்கு எவ்விதக் காரணங்களும் இயம்ப முடியாதென்பது உறுதி. ஒருவருக்குப் பிறந்த குற்றத்திற்காக, தீண்டத் தகாதவரென்றால் பெரும் பேதைமை. அக்கொள்கையுடையார் வாதங்கள் அறிவு வழியே செல்லா. அவர், சாத்திரங்கள் சாற்றுகின்றனவென்றும் பிறவும் கழறுவர். சாத்திரங்களைப் புரட்டினால் அவை பலப்பல சாற்றும், அவர் கொள்கையை மறுத்துத் தூக்கியெறிய அவர் கொள்ளும் அச்சாத்திரங்களுள் எண்ணற்ற சான்றுகள் உள. அக்குப்பைகள் கிடக்க. ஈண்டு அவற்றில் புகவேண்டாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/108&oldid=1322966" இலிருந்து மீள்விக்கப்பட்டது