பக்கம்:குற்றால வளம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

மடமை



மடமை

மடமை என்பது அறியாமை எனப் பொருள்படும். மடமைக்கு வேறு பொருளுமுண்டு. ஈண்டு அறியாமை என்னும் பொருளிலேயே மடமையைக் குறிக்கிறேன். அறியாமை யுடையோரை இவ்வுலகில் மடயர் என அழைப்பதை அனைவரும் அறிவர். மடயர் என்ற சொல் சமையற்காரரையும் குறிக்குமெனச் சிலர் செப்புவர். அது மடமையாற் கூறுவதேயாகும். சமையற்காரரை மடையர் என்ற சொல்தான் குறிக்கும். "மடயர்" என்ற சொல்லுக்கும் "மடையர்" என்ற சொல்லுக்கும் வேறுபாடுண்டு. மடமை உடைமையினாலே முன்னையவர் மடயர் என்று வழுத்தப் படுகிறார். மடைத்தொழில் உடைமையினாலே பின்னையவர் மடையர் என்று அழைக்கப்படுகிறார். முன்னையர் மடம் காரணமாகப் பெயர் பெற்றவர். பின்னையவர் மடை காரணமாகப் பெயர் பெற்றவர். மடை என்பதற்குச் சோறு என்பது பொருள். இரண்டுக்கும் சம்பந்தமில்லை. ஆனால் உச்சரிக்கும் பொழுது ஒலி ஏறக்குறைய ஒன்றாகத் தோன்றும். அது கொண்டு சொல்லாராய்ச்சி சிறிதும் இல்லாச் சிலேடைப் புலவர்கள் இரண்டையும் ஒன்றெனக் கொள்வர். இதற்கு இவ்வளவு கூறிவிட் டேன் என்று யாரும் எண்ணமாட்டாரென நம்புகிறேன். மக்கள் தவறாக உணரத்தக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/115&oldid=1325619" இலிருந்து மீள்விக்கப்பட்டது