பக்கம்:குற்றால வளம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

3

 இயல்பாகவே அமைந்து கிடக்கும் அம்மலைக் கற்களை முதலில் நோக்கலாம். அம்ம்ம்ம! என்ன அழகிய கற்கள்! எத்துணைப்பலமாதிரி எவ்வளவு பெரிய கற்கள்! எவ்வளவு சிறிய கற்கள்! உலகத்தில் இதற்கு மேல் பெரிய கற்களில்லையென்றுகூட நிச்சயிக்கத் தக்க மிகப் பெரிய கல்தொகுதியும் காணப்படுகின்றன. இதற்குச் சிறிய கற்களில்லையென்று இயம்பத் தக்க நுண்ணியகற்களும் கிடந்தழகு செய்கின்றன. இவைகளைக் காண்டொறும் "இவற்றை யாரே ஆக்கினார் என்னே.இயற்கையின் அற்புதம்" என்ற நினைவு. தோன்றாதொழியுமோ? தச்சன் உளியினாற் செதுக்கி அரும்பாடுபட்டு ஒழுங்குப்படுத்தனாலன்ன அழகிய பலப்பல வடிவான கற்குப்பைகள் நிரல் நிரலாக மலையின் எல்லாப்பகுதிகளினும் கிடந்தணி தருகின்றன. உருண்டை வடிவமாகவும் சதுர வடிவமாகவும் நீண்ட வடிவமாகவும் முக்கோண வடிவமாகவும் பிற எல்லா வடிவமாகவும் சிறிதாகவும் பெரிதாகவும் உடைக்கப்பட்டதாக, இல்லாமல் தனித்தனியே கிடந்து கண்ணக் கவர்கின்றன. சில கற்கள் வைரத்தைப் போன்று ஒளிவிடுகின்றன. ஈண்டு ஒன்று ஞாபகப்படுத்த விரும்புகிறேன். நமது புராண உலகத்தார் கில் கல இலிங்கங்கள் உளியினாற் செய்யப் படாதன என்று பெருமை கூறுகின்றன்ரல்லவா? அவை இன்னமலைகளில் இயல்பாகக் கிடந்து கொணரப்பட்டனவாகவே இருத்தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/12&oldid=1290767" இலிருந்து மீள்விக்கப்பட்டது