பக்கம்:குற்றால வளம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

குற்றால வளம்

 வேண்டும். யாண்டுக் கண்ணைச் செலுத்தினாலும் பச்சைப்பசுமரத்தின் அழகு ஒன்றே கண்களை நிறைத்து நிற்கும். அருவிவீழ் அ ழ கு. அறையுந்தகையதோ? இது நிற்க,

செழுமை என்ற பொருளே ஈண்டு வளத்திற்கு முற்றும் பொருத்தும். குற்றாலமாமலையில் எல்லாவற்றையும் விட மிகுந்து மேலோங்கி நிற்பது செழுமையேயாகும். மலையில் நின்று நோக்கினால் கண் செல்லும் தூரம் வரைப் பச்சை நிறமே தென்படும்; நீல நிறக் குடுமிக் குன்றுகள் யாண்டும் வானத்தை அளாவி நிற்கும். அம்மலைமீது மஞ்சுதவழ் இயற்கைப் பெரும் பேரழகை எவ்வாறு அலங்கரிப்பது! அம்மலையை இத்துணை வளம் படுத்தியது மஞ்சல்லவா? செழுமை மல்கித் துதைந்து கிடப்பதற்குக் காரணமாக இருப்பது அம்மேகமே.

ஏன்? சுருங்கக்கூறுமிடத்து, குற்றாலத்தை இத்துணை வளமுடை நகராக்கி மக்களை அறை கூவி அழைத்து இன்பமீயத் துணைக்காரணமாகின்றது கொண்டலே. அது யாண்டும் உலாவுகின்றது. அது, தனக்கு என்றும் இருக்க ஏற்ற இருப்பிடமாகக் கொண்டிருப்பது குற்றாலமலை போன்ற பெருங்குன்றுகளே. மழை சிறிதும் வருத்தமின்றிக் தவழ்வதற்கு ஏற்றபடியாக உயர்ந்து நிமிர்ந்து வானந்தடவும் சிகரங்கள் பலவற்றைக் கொண்டிருக்கும் குற்றாலம் மலைபோன்ற மலைகளை, முகில்,விளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/13&oldid=1290773" இலிருந்து மீள்விக்கப்பட்டது