பக்கம்:குற்றால வளம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

113



மலைநாடு

மலை நாடு என்றால் மலை சூழ்ந்த நாடு என்பது பொருள். மலைசூழ்ந்த எல்லா நாட்டிற்கும் இப்பெயர் பொருந்தும். எனினும் சிறப்பாக ஒரு தனி நாட்டைக் குறித்தே ஈண்டு இக்கட்டுரை எழுந்தது. ஈண்டு மலைநாடு என எடுத்துக் கொள்ளப்பட்டது, தமிழ் காட்டின் எல்லைப் புறத்தேயுள்ள மலைநாட்டை. அது மலையாள நாடு என வழுத்தப்படுகிறது. அந்நாட்டு மக்கள் பயில்மொழி மலையாளம் என்ற பெயரிய மொழி. அம்மொழி வழங்குமிடம் மலையாள நாடு. அக்நாடு மலைசூழ் நாடாக இருத்தல் கொண்டே ஆண்டு நிலவும் மொழி மலையாள மொழியென்றும் ஆண்டு வாழ் மக்கள் மலையாளிகள் என்றும் வழுத்தப் பெற்றிருத்தல் வேண்டும்.


அந்நாட்டின் பெயர் காரணங் கற்பிக்க முடியாத பல நாடுகளின் பெயர்களை ஒத்திருக்கவில்லை. உலகம் உள்ளளவும் மிக எளிதில் எல்லோரும் அறிந்துகொள்ளத் தக்க நிலையில் தக்க காரணத்தோடு அந்நாட்டின் பெயர் அமைந்துள்து. மலை சூழ்ந்த நாடு மலை நாடு. மலை நாட்டின் பெயரைக் காட்ட மலைமீதே அந்நாட்டு ஊர்கள் முழுமையும் நிலவுகின்றன. மலைமீது வாழ்கின்றவ்ர் மலையாளிகள். அவர் பேசும்மொழி மலையாள மொழி. மலையாளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/122&oldid=1343987" இலிருந்து மீள்விக்கப்பட்டது