பக்கம்:குற்றால வளம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

மலை நாடு

 கள் வாழுமிடம் மலையாளம் என்று பின்னர் மருவி வந்திருத்தல் வேண்டும்.

அம் மலைநாடு அரசியலில் இந்நாள் மூன்று பகுப்பாகப் பிரித்து நிற்கிறது. சிலபகுதி நேரே ஆங்கிலத்தார் அரசியலைத் தாங்கியிருக்கிறது. கொச்சி சமஸ்தானம் என ஒரு பகுதி உள்ளது. திருவாங்கூர் சமஸ்தானம் என இன்னொரு சுதேச அரசியலை மற்றொரு பகுதி கொண்டு நிற்கின்றது. இம்மூன்றனுள் பெரும் பகுதி திருவாங்கூர் சமஸ்தானத்தையே சார்ந்துளது. எனவே, மலைநாடு-அல்லது மலையாளம் என்று கூறுதல் சிறப்பாகத் திருவாங்கூர் சமஸ்தானத்தையே குறிக்கக்காண்கின்றோம், திருவாங்கூர் சமஸ்தான ஆளுகைக்குள் மலை நாட்டின் பாங்கருள்ள கன்னியாகுமரி முதலிய சில தமிழ்நாட்டு ஊர்களும் சேர்ந்திருக்கின்றன. கன்னியாகுமரியிலிருந்தே மலைநாட்டு நாகரிகம் தொடங்கிவிடுகின்றது.


திருவாங்கூர் என்பது ஒரு ஊரின் பெயரல்ல. அது அந்த சமஸ்தானத்தின் பொதுப் பெயர். திருவாங்கூர் என்ற பெயரோடு அந்த சமஸ்தானத்தில் ஒர் ஊர் இல்லை. சில சமஸ்தானங்கள் அரசிருக்கைத் தலைநகர்ப் பெயரைச் சமஸ்தானப் பெயராகக்கொண்டு விளங்கும். புதுக்கோட்டை சமஸ்தானம், மைசூர் சமஸ்தானம் என்பன தலைநகரின் பெயர் கொண்டு விளங்குவன. திருவாங்கூர் சமஸ்தானப் பெயர் அவ்வாறு அமையவில்லை. அச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/123&oldid=1343989" இலிருந்து மீள்விக்கப்பட்டது