பக்கம்:குற்றால வளம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

மலை நாடு


நிலைகளெல்லாம் அக் காட்சிச்சாலையில் இருக்கின்றன. அந்நிலையை நோக்க, இப்பொழுதிருக்கின்ற மலையாளம் எவ்வளவோ முன்னேறியது என்பது விளங்கும். மரவுரி தரித்த மக்கள் இன்றைக்கும் மலைக் காட்டில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறது. அம்மலை வேட்டுவர்க்குக் காணிக்காரர் என்ற பெயர் அங்கு சொல்லப்படுகிறது. காணிக்காார் என்றால் உரிமையாளர் என்பது பொருள். அம்மலை அவர்கட்கு உரிமை யுடையது என்ற பொருளில் அச்சொல் அமைந்துளது.


மலைநாட்டிலுள்ள குறைகளுள் மிகப்பெருங் குறை ஒன்று. அதனைச் சொல்லாது விடுவது சரியன்று. அம்மலைநாடு முழுமையும் ஒரு சில போத்தி என்று கூறப்படுகின்றவர்கட்கு அடிமை யென்று கூறுதல் தவறாகாது. அரசனே அவர்கட்கு அடிமை என்றால் மற்றவர்களைப் பற்றிக் கூறுவானேன்? அரசினர் இவர்கட்குத் தந்திருக்கும் ஆதிக்கத்திற்கு ஒரு எல்லை கிடையாது. மலையாள ராஜ்யம் போத்திகள் ராஜ்யமாகவே விளங்குகின்றது. மலைநாட்டிலுள்ள கோவில்கள் இவர்கள் கையிலேயே அகப்பட்டு விழிக்கின்றன. அம்மம்மா! என்ன அக்கிரமம் இவர்கள் செய்வது! மலையாள அரசியலில் பேரறியாமை நிரம்பிய பெருங் குறை இது. இந்தப் போத்திகள் என்பார் தங்களையும் தங்கள் இனத்தவர்கள் என்று எண்ணிக் கொள்கின்ற பார்ப்பாரையும் தவிர, மற்றவர்களை யெல்லாம் மனிதராகவே மதிப்பதில்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/127&oldid=1344001" இலிருந்து மீள்விக்கப்பட்டது