பக்கம்:குற்றால வளம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

119

 என்பதை அவர்கள் கோயில்களில் செய்யும் ஒவ்வொரு செயலும் காட்டுகின்றது. அவ்வளவுக்கு இடங்கொடுத்திருக்கிறது திருவாங்கூர் அரசாங்கம். பொதுவாக இந்தியா எங்கும் ஆலயங்கள் ஒருவகையாகவே நடக்கின்றன வென்றாலும், திருவாங்கூர் சமஸ்தான ஆலயங்களில் நடக்கும் அறியாமை வேறு யாண்டுமில்லை.


பிறப்பினால் பார்ப்பனரல்லாதார் என்று கூறப்படுகின்றவர் முதலில் நுழைவாயிலிலேயே சில சமயங்களில் கோவில் ராஜகோபுர வழியே போகக்கூடாதென்று தடுக்கப்படுகிறார். அவர் கோவிலுக்குள் உள்ள ஒற்றைக் கல் மண்டபத்தைத் தொடக்கூடாது; கோவிலுக்குள் விழுந்து கும்பிடலாகாது; அங்குள்ள மணியை அடித்தலாகாது; பூஜை ஆகும்போது கோவிலுக்குள் நிற்றலாகாது. இன்னும் ஏதேதோவெல்லாம் சொல்லிக் கோவிலுக்குள் நுழையும்பொழுதே பாடங் கற்பிக்கப்படுகிறது. விபூதியை பூசாரியாகிய போத்தி கையில் கொடுக்கமாட்டார். ஓங்கி வீசுவார் இப்படி அநாகரிகங்கள் பல. ஊட்டுப்பொறை என்று சொல்லி கோவிலுக்குள் ஒரு வேளைக்கு ஆயிரக்கணக்கான பார்ப்பார்க்கு வேளை தவறாமல் சோறு போடப்படுகிறது.அவர் கோவிலுக்குள் சாப்பிட்டுவிட்டு எங்கும் அசுத்தப் படுத்துகின்றனர். அக்கோவிலிலுள்ளோர்கட்கு எது சுத்தம் எது அசுத்தம் என்பது சிறிதும் விளங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/128&oldid=1344024" இலிருந்து மீள்விக்கப்பட்டது