பக்கம்:குற்றால வளம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

மலை நாடு


வில்லையென்பது அவர்கள் செயலால் காணப் படுகின்றது. பார்ப்பனரல்லாதார் விழுந்து கும்பிடுதல் அசுத்தமென்று கருதுகிறார், கோவில் நிறையப் புகையிலை எச்சலை உமிழ்தலும் சாப்பிட்ட எக்சில்களைப் போடுவதும் அசுத்தமென்பது தெரியவில்லை. சட்டை போட்டுக்கொண்டு போதல் சரியன்று எனத் தடுக்கிறார், வாயில் எச்சல் வழியப் புகையிலையை அடக்கிக் கொண்டு செல்வோர் அனுமதிக்கப்படுகிறார். கோயில் திருக்குளத்தில் செய்யப்படும் ஆபாசங்கட்கு அளவில்லை. அங்கு விழுந்து கும்பிடுவது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. காலச் சுவாமிபக்கம் நீட்டிக்கொண்டு குந்திக் கும்பிடுகின்றனர். சுருங்கச் சொல்லுமிடத்துக் கோவில் ஆபாசம் நிறைந்த ஒரு இடமாக விளங்குகின்றது. அங்கு நடைபெறும் செயல் கட்கும். அறிவுக்கும் அணுவும் தொடர்பு இல்லை. நாகரிக உலகப்போக்கை அறியும் அரசினர் இக்துணை அநாகரிகத்துக்கு இடந்தருதல் விரும்பத் தக்கதன்று. வளமலி மலைநாட்டு மக்கள் இன்ன குறைகளைப் போக்குங் கடமையில் இறங்க வேண்டுவது அவசியம்.




"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/129&oldid=1344018" இலிருந்து மீள்விக்கப்பட்டது