பக்கம்:குற்றால வளம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

குற்றால வளம்


அம்பார் குன்றம் நீடுயர் சாரல் வளர்வேங்கைக்
கொம்பசர் சோலைக் கேசலவ்ண் டியாழ்செய் குற்றாலம்
செல்வம் மல்கு செண்பகம் வேங்கை சென்றேறிக்
கொல்லலை முல்லை மெல்லரும் பீனுங்குற்றாலம்
பக்கம் வாழைப் பாய்கனி யோடு பலவின் தேன்
கொக்கின் கோட்டுப் பைங்கனி தூங்குங் குற்றாலம்
மலையார் சாரல் மகவுடன் வந்த மடமத்தி
குலையார் வாழைத் தீங்கனி மாந்துங் குற்றாலம்
மைம்மா நீலக் கண்ணியர் சாரல் மணிவாரிக்
கொய்மா ஏனல் உண்கிளி ஒப்புங் குற்றாலம்
நீல்நெய்தல் தண்சுனை சூழ்ந்த நீள்சோலைக்
கோல மஞ்ஞை போடையோ டாடுங் குற்றாலம்
போதும் பொன்னும் உந்தியருவி புடைசூழக்
கூதன் மாசி நுண்டுளி தூங்குங் குற்றாலம்
அரவின் வாயின் முள்ளெயி றேய்ப்ப அரும்பின்று
குரவம் பாவை முருகமர் சோலக் குற்றாலம்
பெருந்தண் சாரல் வாழ்சிறை வண்டு பெடைபுல்கிக்
குருத்தம் ஏறிச் செல்வழி பாடுங் குற்றாலம்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/17&oldid=1291395" இலிருந்து மீள்விக்கப்பட்டது