பக்கம்:குற்றால வளம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

9



தெய்வத்தன்மை

தெய்வத்தன்மையாவது யாது என்பதை ஆராயலாம். மாக்கள் தன்மை, மக்கள் தன்மை, தெய்வத்தன்மை யாதி தன்மைகள் பலவாகும். அவற்றுள் தெய்வத் தன்மையை ஈண்டு நோக்கலாகும். தெய்வத் தன்மையைப் பார்க்கும்முன் தெய்வம் என்றால் என்ன எனச் சிறிது சிந்தித்தல் அவசியம். தெய்வம்-கடவுள்-இறை என்பவற்றை மக்கள் ஒரே பொருளில் வழங்குகின்றனர். தெய்வத்தைப் பற்பலரும் பற்பலவாறு கொள்கின்றனர். தெய்வமென ஒரு பொருள், உருவத்தோடு மக்களைப்போல் இருப்பதாக எண்ணுவோர் தொகையே உலகில் மிகுதியாக இருக்கின்றது. ஒவ்வொருவர் ஒவ்வொரு உருவத்தைத் தெய்வமெனக் கொள்கின்றார் உண்மையில் தெய்வம் பலவன்று. தெய்வம் ஒன்றுதான். அது, ஒரு உருவுடையதன்று. மேலொரு பொருளுமில்லா ஒரு பெரும் சக்தியே தெய்வம். அத் தெய்வம் யாண்டும் நிறைத்துளது; அது எல்லாமானது.

தெய்வத்தன்மையாவது யாது? இதற்குச் சுருக்கமாக விடைகூறின் உயரிய செயல் என்று உரைக்கலாம். எதெது உயரியசெயலோ அவ்வனைத்தும் தெய்வத்தன்மை பொருத்திய செயல் என்று தடையின்றிச் சாற்றலாம். ஒருவனைத் தெய்வக் தன்மையுடையான் என்றால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/18&oldid=1301362" இலிருந்து மீள்விக்கப்பட்டது