பக்கம்:குற்றால வளம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

தெய்வத்தன்மை


லென்? செயலைப்பற்றிய தன்றோ பெருமையும் சிறுமையும்? சிறிய செயலைச் செய்த வன்றே, முன்னேபெரியவராக இருந்த ஒருவர் சிறியவராகிவிடுகிறார் என்பதில் தடையென்னே? "தலையின் இழிந்த மயிர் அனையர் மாந்தர் நிலையின் இழிந்தக்கடை" என்பது வள்ளுவர் குறள், மயிர் தலையிலே இருக்கும் பொழுது அது எவ்வளவு உயர்ச்சி பெறுகிறது; கீழே உதிருமானால் அகனத் தீண்டவும் அஞ்சுகின்றோம். ஒரே பொருள்தான் தலையிலிருந்த பொழுது சிறப்புற்றிருந்தது; அவ்விடம் விட்ட பின் இழிவுபெற்றது. அவ்வாறே மாந்தர் மயிரனையர். அவர் பெரிய செயல் செயுங்கால் தலையிலிருந்து அணிசெய்யும் மயிர்போலவும் சிறிய செயல் செயுங்கால் கீழே விழுத்து குப்பையிற் கிடக்கும் மயிர்போலவும் ஆகின்றார். செய்கைக்கேற்றதே சிறப்பு. எவராகவிருந்த போதினும் சிறுமை புரிந்த அளவில் அவர் சிறியவரே.


"செயற்கரிய செய்வர் பெரியர், சிறியர் செயற்கரிய செய்கலாதார்." செயற்கரியகாரியயத்தை எவர் செய்கின்றாரோ அவர் தாம் பெரியவர்; அவரே தெய்வத்தன்மையுள்ளவர். மற்றவர் சிறியவரே. செயற்கரிய செயலாவது யாது? அது தான் அற்புதம் என்று அறைகின்ற பொய்யான செயல் என்று எண்ணுதல் வேண்டாம். என்றும் எவரானும் செய்யமுடியாத இயல்புவாய்ந்ததுதான் செயற்கரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/23&oldid=1291643" இலிருந்து மீள்விக்கப்பட்டது