பக்கம்:குற்றால வளம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

19

 உலகம், பரந்து விரிந்து கிடக்கும் தன் நீர்மைக்கேற்ப எல்லா வகையையும் இணைத்துக் கொண்டிருக்கும் இயல்பு வாய்ந்ததாக விருக்கின்றது. உலகம், தீயவையெல்லாம் போக்கி நல்லவையே கொண்டு நிலவு என்றும் முடியாதென்பது உறுதி. உலகம், எந்தக்காலத்திலும் குறித்த எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு தான் பிறங்கி இருந்த கன்றி வேறு வகையாக இருந்ததாக உய்த்துணரக் கூடவில்லை.


இத்துணைப் பல பொருள்களை உலகம் உடைத்தாகவிருந்த போழ்தினும் உயர்ந்தோரை உடைத்தா யிருக்கும் ஒன்று கொண்டே உலகம் பெருமை பெறுகிறது. உலகத்தின் சிறப்பு உயர்ந்தோரையே பொறுத்து நிற்கின்றது. அதனாலன்றோ "உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே" என்றார் பெரியார். இழிந்தாரும் உயர்ந்தாரும் உலகத்தில் என்றுமுளர். இழிந்தார் இன்றேல் உயர்ந்தார் என்ற பெயரே வந்திருக்க முடியாது. உலகம் எல்லோரையும் எல்லாப் பொருள்களையும் என்றும் உடைத்தாகவே இருக்கும், அதுவே உலக இயல்பு. அதினின்றும் மாறு படுத்த ஒருநாளும் முடியாது.


ஒருநாளும் மறங்களை யெல்லாம் தொலை த்து அறங்களை நிலைநாட்ட முடியாதென்றால் பின்னைத் திருத்தங்கள் எதற்கு என்ற வினா எழலாம். திருத்தஞ்செய்யப் பெறாவிட்டால் மறங்களே பெருகிச் செல்லும். அவ்வாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/28&oldid=1293331" இலிருந்து மீள்விக்கப்பட்டது