பக்கம்:குற்றால வளம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

21


அறப்போர் புரிவோர் சலித்தல் ஆகாது. உயர்ந்த மக்கட்கு அறப்போர் புரிதலைத் தவிர வேறு கடனில்லை. "என் கடன் பணி செய்து கிட்ப்பதே." என்ற உயர் சொற்றொடரின் பொருள் உற்று நோக்கத்தக்கது. பணி செய்து மறத்தைத் தொலைத்து அறத்தை என்றும் அழியாவாறு நிலை நாட்டிவிடக் கூடுமானால் பணிசெய்தே கிடத்தல் என்பது வேண்டுவ தில்லையன்றோ? என்றும் பணி செய்தே கிடத்தல் கடனெனப் பணிக்கும் பொழுது பணியாகிய அறவினை செய்தல் என்றும் நிகழவேண்டிய ஒன்றே என்பது கிடைக்கின்றதன்றோ? பணிசெய்தற்கு ஓர் கால வரையறை கிடையாது. பணிசெய்து கிடத்தலையே என்றும் கடனாகக் கொள்ளவேண்டுவதே அறவோர் செயல்.


எவ் உயர்ந்தோராலும் உலகில் இனிமேல் மறம் நிகழாவண்ணம் அறங்கோலி வைத்தல் முடியாத காரியம். உலகத்தில் எத்துணேயோ பெரியோர்கள் எத்துணேயோ அறங்களை ஆற்றியிருக்கக் காண்கின்றோம். முன்னே செய்தது இன்று அழிவதும் இன்று செய்வது நாளை அழிவதும் இயல்பு. இவ்வுண்மை ஒர்ந்து எவ்வெக்காலத்தில் எவ்வெவ்வாறு செய்தல் வேண்டுமோ அவ்வக்காலத்தில் அவ்வவ்வாறு ஆற்றுதல் வேண்டும், சந்தர்ப்பம் நோக்கி அவ்வக்காலங்கட் கேற்றவாறு ஆற்றாவிட்டால் மறத்தோடு அமராடி வெல்தல் அருமை, இன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/30&oldid=1293335" இலிருந்து மீள்விக்கப்பட்டது