பக்கம்:குற்றால வளம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

உலக இயல்பு

 னதுதான் அறவினை என்று வரையறுத்துக் கூறிவிடமுடியாது. அது காலத்திற்கேற்றபடியாகவே இருக்கும். :முன்னவர் சொல்வழியே செல்லவேண்டும்; அதில் நின்றும் சிறிதும் பிறழ்ந்து போதல் ஆகாது” என்று கருதுவோர் கூற்று உலக இயல்புக்கு ஒவ்வாதது. மேலும் அது அறிவிலார் கொள்கையுமாகும். இவ்வுலகில் முன்னவர்க்கிருந்த உரிமை பின்னவர்க்கு ஏன் இல்லை?


"உலகம் பழைய காலத்தில் அறத்திற்கே உறையுளாக இருந்தது; வரவர அறங்குன்றி வருகிறது." என்று இயம்பும் கொள்கையுடையார் இங்கு ஒரு சாரார் இருக்கின்றார், இது பெருந்தவறுடைக் கொள்கை. அறமும் மறமும் மாறி மாறி உயர்ந்தும் தாழ்ந்தும் வருதலே உலக இயல்பு. உலகத்தில் அறமில்லாத நாளும் இல்லை; மறம் இல்லாத நாளும் இல்லை. ஒரு காலத்தில் அறம் ஓங்கியிருக்கலாம். ஒரு காலத்தில் மறம் ஓங்கியிருக்கலாம். அடிக்கடி திரும்பத்திரும்ப இவை மாறி மாறி வரும். இதுவே உலக இயல்பு.


உலகத்தில் ஒவ்வொரு காலத்தினும் அறஞ் செப்பனிட்டார் பலர். அவையனைத்தும் இன்று நின்று நிலவுகின்றனவோ? இன்று செப்பனிடப்பெற்றது தேய்ந்து தேய்ந்துவந்து இன்னும் பன்னாளில் அற்றுவிடும். அது தேய்ந்து வருக்கால் விடாமல் கண்காணித்து வேண்டுவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/31&oldid=1293336" இலிருந்து மீள்விக்கப்பட்டது