பக்கம்:குற்றால வளம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

கல்வியும் அறிவும்


கிறார் தலபுராணங்களெல்லாம் சாற்றுகிறார். மிடுக்குகள், திரிபுகள், யமகங்களையெல்லாம் கேட்டபடி உடைத்தெறிகிறார். அந்த நூல்களைப்பற்றி நாட்கணக்காகச் சொற்பெருக்கிடுகிறார். இத்துணை மூட்டைகளைக் கற்றிருந்தும் என்பயன்? இது நல்லது இது கெட்டது என்ற மெய்யை உண்மையாக அறிந்துகொள்ளத் தெரியவில்லை. ஒன்றும் கல்லாத ஒருவர் அறிவைப் பயன் படுத்தித் தக்க தகாதன அறிந்துகொள்கிறார்.


ஒருவர் வடமொழியிலோ, ஆங்கிலத்திலோ, பிறமொழியிலோ உள்ள பலப்பல நூல்களைப் படித்திருக்கிறார், பட்டங்களெல்லாம் பெற்று விடுகிறார், எந்த மொழியில் எத்துணை நூல்களை எத்துணை ஆண்டுகள் உருப்போட்டாலும் நன்மை, தீமை அறிந்துகொள்கின்றாரில்லை; ஒன்றும் கல்லாத சர்வ சாதாரணமான மக்கட்குள்ள பகுத்தறிவில் ஒரு சிறு பகுதியும் கூட இல்லாதுறைகின்றார் ஆனால் அறிவு உண்டோ இல்லையோ நூல் பல கற்றிருக்கின்றோம் என்ற மமதை இவர்களிற் பலருக்கு மிகுதியும் இருக்கக்காண்கின்றோம்.


சமய சாத்திரத்தில் மிக வல்லுநரென ஒரு சாரார் சாற்றித்திரிகிறார். இவருள் பெரும் பாலார் மிக்க குறுகிய புத்தியுடையவராகவே இருக்கின்றார். தத்தம் சமயங்களைப் பற்றியும் சமயாச்சாரியார்களைப் பற்றியும் இவர்கள் கூறும் புனைந்துரைகட்கும் பொய்யுரைகட்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/47&oldid=1301306" இலிருந்து மீள்விக்கப்பட்டது