பக்கம்:குற்றால வளம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

39

 எல்லை கூறமுடியாது. இவர்கள் கூற்றுக்கும் அறிவுக்கும் சம்பந்தம் லவலேசமும் இராதென்பதை ஆராயும் எவர்க்கும் நான் கூறவேண்டுவதில்லை. அகங்காரத்தில் இவருக்கு எவரையும் ஈடு சொல்தல் முடியாது.


நூல் ஒன்றும் கல்லாமலேயே உலக வழக்குகள் கற்றவருள்ளும் பலர் அறிவு வழியே செல்லக் காண்கின்றோமில்லை. இவர்கட்கும் எல்லாம் தெரியும் என்ற இறுமாப்புக் குறை வில்லை. இவரனைவரும் அறிவை முக்கியமாக ஆண்டு எவர்கூற்று எவ்வாறு இருப்பினும் எல்லாவற்றையும் தம் அறிவால் கண்டு மெய் கொண்டு பொய் தொலைப்பாரானால் நாடு இன்று இருக்கும் இழிவான நிலையிலா இருக்கும்? சிறிது கற்றாலும் செருக்குறுவதில் பின்னடைகின்றனரில்லை. அறிவை ஆளுமிடத்து முதலில் அச்செருக்குப்படும். அறிவின்மையினாலேயே அன்னவற்றிற்காட்பட்டழிய நேர்கிறது.


அன்றி, கற்றவர் பலர் தங்கள் கொள்கை கட்கெல்லாம் ஒரே ஒரு பற்றுக்கோடு வைத்துக்கொண்டிருக்கிறர் தாம் கூறும் ஒன்றைத் தம்மதி நுட்பங்கொண்டு காரணத்தோடு உலகம் ஒப்புக்கொள்ளக் கூற அறிவதில்லை. "அவர் சொல்கிறார் இவர் சொல்கிறார், அந்த நூல்சொல்லுகிறது; இந்த நூல் சொல்லுகிறது. ஆகையினாலே ஏற்றுக்கொள்" என்கிறார், இப் பொருளற்ற உரைகளைச் சொந்த அறிவுள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/48&oldid=1301333" இலிருந்து மீள்விக்கப்பட்டது