பக்கம்:குற்றால வளம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

கல்வியும் அறிவும்


அறிஞர் எவரே ஏற்பர். எவர் சொன்னாலென்? ஏன் சொன்னாரென்பதை யன்றோ உணர்தல் வேண்டும்?


"திருநீறு ஏன் பூசுகின்றாய்" என்றால் "மந்திரமாவது நீறு" என்று கூறுகிறவன் எவ்வளவு மூடன்! "திருமண் ஏன் தீட்டுகின்றாய்" என்றால் "என் தகப்பனைப் பின்பற்றி" எனச் சாற்றுகின்றவனுக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லையென்பதில் என்னே பிழை! கற்றார் மற்றார் ஆகிய பலரும் இப்படியே அறிவை ஆளாமல் எல்லாச் செயளையும் செய்கின்றார்.


இதனால் கற்றவராகக் கருதிக்கொள்ளும் எவரும் என்மீது சினத்துகொள்ள வேண்டுவதில்லை; மற்றவரும் வருந்தவேண்டுவதில்லை. கற்றவரனைவரும் அறிவில்லாதவர் என்று நான் கழறியதாக எவரும் பிறழ உணர்கல் ஆகாது. கற்றவருள்ளும் அறிஞர் உண்டு. மற்றவருள்ளும் அறிஞர் உண்டு. கல்விக்கும் அறிவுக்கும் தொடர்பு உண்டாக்கினால் மிக நல்லது. மற்றவரைக் காட்டினும் கற்றவர் அறிவைக் கையாண்டால் பயன் மிகுதியாக உண்டு. அறிவுக்குக் கல்வி பெருந்துணை புரியும் என்பதில் ஐயமில்லை. ஆகலின் எல்லோரும் அதிற் சிறப்பாகக் கற்றோரும் அறிவைக் கையாள வேண்டுமென்பதே எனது பெரு விருப்பம்.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/49&oldid=1301343" இலிருந்து மீள்விக்கப்பட்டது