பக்கம்:குற்றால வளம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

நிலையிலா வாழ்வு


கின்றன. ஆனால் நூல்கள் கூறுவனவெல்லாம் அநுபவத்திற் காணாதனவென்று எண்ணுதல் வேண்டாம். நிலையாமைபற்றி நூல்கள் கூறியிருக்கும் அனைத்தையும் இன்று நாம் கண்டு வருகின்றோம்.


உலகவாழ்வில் ஒன்றும் நிலைபுடையதல்ல; யாவும் அழிதன் மாலையது. செல்வம் நிலையுடையதல்ல; மாட மாளிகையும் கூடகோபுரங்களும் நிலையுடையனவல்ல; மக்கள் மனைவி நிலையுடையவரல்லர் ; இளமை நிலையுடையதல்ல; யாக்கை நிலையுடையதல்ல. செல்வம் நிலையுடையதானால் என்றும் அகலாது ஒருவர் பால் அது இருத்தல் வேண்டும். அங்ஙனம் காண்கின்றோமோ உலகில்? இல்லை; இல்லை. இன்று பெருஞ் செல்வம் படைத்துப் பெரு வாழ்வு வாழும் ஒருவர், நாளை யாவும் இழந்து கூழுக்கு வருந்துகிறார்; நேற்று மணிமுடி தரித்து அரியணையிருந்து தன்னேர் இன்றி அவனியை யாண்ட ஒருவர், இன்று தேடுவாரற்றுக் கிடக்கின்றார், "துகடீர் பெருஞ்செல்வம் தோன்றியக்காற் றொட்டுப், பகடுநடந்த கூழ் பல்லாரோடுண்க-அகடுற, யார்மாட்டும் நில்லாது செல்வம், சகடக் கால்போல வரும்." "'அறுசுவை யுண்டி யமர்த்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கி யுண்டாரும்-வறிஞராய்ச், சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழெனிற் செல்வ மொன்று, உண்டாக வைக்கற்பாற் றன்று". "யானையெருத்தம் பொலியக் குடைநிழற் கீழ்ச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/53&oldid=1303445" இலிருந்து மீள்விக்கப்பட்டது