பக்கம்:குற்றால வளம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

45

 சேனைத்தலைவராச் சென்றோரும்-ஏனை, வினை யுலப்ப வேறாகி வீழ்வர்தாங் கொண்ட, மனையாளை மாற்றார் கொள." என்பனவாதி பாட்டுக்களால் செல்வம் நிலையாமையை நாலடி நன்கு செப்புகின்றது.


"கூத்தாட் டவைக்குழாத் தற்றேபெருஞ் செல்வம், போக்கும் அது விளிந்தற்று" என்று கூறுகின்றது குறள், குன்றத்தனை இருநிதியைப் படைத்தோர் அன்றைப் பகலே அழியினும் அழிவர்" என வெற்றிவேற்கை விளம்புகின்றது. இவ் உண்மையால் செல்வம் நிலையற்ற தாகின்றது. மாளிகைகள் நிலையுள்ளன. வாகின் அவை என்றும் நிற்கின்றனவா? எத்துணையோ மாளிகை எத்துணையோ பல வழிகளில் நாசமாகக் காண்கின்றோம். "எழு நிலை மாடங் கால்சாய்ந்துக்குக் கழுதை மேய் பாழ் ஆகினும் ஆகும்." என்பது பொய்யன்று. மனைவி நிலையுடையவளுமல்ல; மக்கள் நிலையுடையவர்களுமல்லர்; சுற்றம் நிலையுடையதுமல்ல; எல்லாம் மாளுங் தன்மை வாய்ந்தன. இவற்றிற்கு எச்சான்றும் வேண்டாம் கண் கூடே இளமையும் நிலையாமையை யுடையதேயாகும் இளமை நிலையுடையதாயின் என்றும் இளமையோ டிருக்கலாமன்றோ?" "'பனிபடு சோலைப் பயன் மரமெல்லாம் கனி யுதிர்த்து வீழ்ந்திற்று இளமை" என நாலடி நவில்கின்றது.


யாக்கைக் நிலையாமையுடையது என்பதை நடைமுறையில் அனைவரும் கண்டு வருகின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/54&oldid=1303453" இலிருந்து மீள்விக்கப்பட்டது