பக்கம்:குற்றால வளம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

அடக்கம்

 வள்ளுவனார் வகுத்த குறள்களும் அப்பொருள்களையே புகலுகின்றன. எனவே உளத்தானும் உரையானும் உடலானும் தீயன செய்யா தடங்குதலே அடக்கமுடைமை என்பது கிடைக்கின்றது. இவ் அடக்கமுடைமை உலகெலாம் வளர்ந்திட வேண்டும்.


"காக்க பொருளா அடக்கத்தை; ஆக்கம் அதனினூங் இல்லையுயிர்க்கு" "செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந் தாற்றினடங்கப் பெறின்" என்ற குறள்களின் பொருளைச் சிந்தனை செய்தல் வேண்டும். அடக்க முடைமை கொண்டு வாழ்வதால் விளக்கக் குறைவு ஏற்படு மென்று எண்ணுதல் அறியாமை. அடங்கி வாழ்ந்தால் நம்மை உலகம் அறியாது என்று சிலர் கருதுகிறார். இது தவறு என்பதை "நிலை யிற்றிரியா தடங்கியான் தோற்றம் மலையினும் மானப் பெரிது" என்ற வள்ளுவனார் மறை வலியுறுத்தும். நெறியினின்றும் நீங்காது அடங்கியவன் மலையைக் காட்டினும் பெரிய தோற்றத்தை யடைவா னாதலின் பெயர் விளங்க விரும்புவோரும் அடக்கம் உடைமை கொண்டே தீர்தல் வேண்டும்.


அடக்கமுடைமையால் மலையிலும் பெரிய தோற்றம் பெற்றவர் பலருளர். இந்நாள் நம் கண்முன் உலவும் காந்தியடிகள் அடக்கமுடைமையால் மலையினும் மிக்க தோற்றம் பெற்றவர்களே. காந்தியடிகளை அறியாதார் எவ் உலகத்திலேனும் உளரோ? எதனால் அடிகள் அவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/59&oldid=1304726" இலிருந்து மீள்விக்கப்பட்டது