பக்கம்:குற்றால வளம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

49



அடக்கம்.

"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்."என்பது குறள். அடக்க முடைமை செவ்விதாகக் கருதப்படும். தேவலோகத்திற் கொணர்ந்து செலுத்தும்; அடக்க மின்மை நிறைந்த இருளில் இட்டு விடும். என்றால் அடக்கமுடைமையை மக்கள் விரும்பா திருக்க முடியுமோ? அடக்க முடைமை என்பதற்கு எல்லோருக்கும் அஞ்சி யொடுங்கி யிருத்தல் என்பதும், பிறர் பால் அடங்கி இழிவு வாழ்க்கை வாழ்தலென்பதும், அவை போன்ற பிறவும் பொருளன்று. அடக்கமுடைமையை இன்னோ ரன்ன பொருள் படக் கூறுவாரையும் ஈண்டு நாம் காண்கின்றோம். ஒருவன் வீரமாக ஒழுகுவானானால் இவன் அடக்க மிலானெனச் சிலர் அறைந்து விடுகிறார். சாதாரணமாக அடக்கம் என்பது பயந்த தன்மை என்ற பொருளிலேயே வழங்கப் படுகிறது. அது பெருந்தவறு. அடக்க முடைமைக்கும் அக்கூற்றுக்கும் சம்பந்தம் சிறிதுமில்லை.


"அடக்கமுடைமையாவது, மெய், மொழி, மனங்கள் தீ நெறிக்கட் செல்லாது அடங்குத லுடைமை" எனத் திருக்குறளுக்கு உரை விரித்த ஆசிரியர்பரிமேலழகர் உரைக்கின்றார், அடக்க முடைமை என்ற அதிகாரத்தின் கீழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/58&oldid=1304720" இலிருந்து மீள்விக்கப்பட்டது