பக்கம்:குற்றால வளம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

அடக்கம்

 மனத்தைப்பற்றிப் பலப்பல பெரியோரும் பலப்பல பகர்ந்திருக்கின்றார். அவ்வனத்தையும் ஈண்டுக்கூறல் சாலாது. அம்மம்ம! மனம் பொல்லாது. அது தன்னாட்சி செலுத்தவே பெரிதும் விழையும். அதனை அவ்வாறு அதன் போக்குப்படி விடுதல் ஆகாது. "மனம்போன போக்கெல்லாம் போகவேண்டாம்” என்பது பழவுரை.


மொழியடக்கம் பற்றி வள்ளுவனார் மிக அழகாக மூன்று குறள்கள் அருளியிருக்கின்றார், அம்மூன்றையும் மூன்று பேரொளிதரும் நன் மணிகளென்று மொழியலாம்.


"யாகாவாராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு".

"ஒன்றானுந் தீச்சொற் பொருட்பயன் உண்டாயின்,
நன்றாகா தாகி விடும் "

"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.”


இவற்றின் பொருள் வெளிப்படையாக விளங்குமென்றே கருதுகிறேன்.


மொழியடக்கம், அதாவது நாவைக் காத்துப் பேசுதல் இன்றியமையாது கொள்ள வேண்டுவது. நாகாவாமையால் வரும் கேட்டை வள்ளுவனார் இம்முக்குறளும் நன்கு மொழியா நிற்கின்றன. நாவடக்கம் கொள்ளாமையால் ஒருவன் பயன் ஒன்றையும் அடையப்போவதில்லை. நாவினின்றும் புன்சொல்-பிறரைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/63&oldid=1304751" இலிருந்து மீள்விக்கப்பட்டது