பக்கம்:குற்றால வளம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

55


 துன்புறுத்தும் சொல் பிறத்தலாகாது என்று ஒவ்வொருவரும் கருதுதல் வேண்டும். நாவடங் காது பேசுபவன் பல சந்தர்ப்பங்களில் பெருங் துன்பமடைவானென்பது ஒருதலை. சொற் பொறாமையால் இவ்வுலகில் ஒருவரோடொருவர் இட்டுக்கொள்ளும் பூசல்கள் எத்துணை பார்க்கிறோம். ஏன் இவ்வாறு நாவடங்காது வீண் துன்பங்களை இழைத்துக் கொள்தல் வேண்டும்?


ஆகலின் மெய்யடக்கமுடைமை, மொழியடக்கமுடைமை, மனவடக்க முடைமை ஆகிய மூன்றடக்கம் உடைமையும் இன்றியமையாது கொள்ளத் தக்க பொருள்கள். அடக்க முடைமை சிறிதும் தவறாகாது. அடக்கமுடையாரை அறிவிலரென்றெண்ணிக் கடக்கக் கருதுவோர் உள்ராயின், அது அவர்கள் குற்றமேயன்றி அடக்கமுடையார் சிறிதும் தாழ்வடையார். "அடக்கம் அமரருள் ளுய்க்கும்; அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்” என்ற அருங்குறளைத் திரும்பவும் ஒரு முறை நினைவு கூறுவோம்.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/64&oldid=1304760" இலிருந்து மீள்விக்கப்பட்டது