பக்கம்:குற்றால வளம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

அழுக்காறாமை



அழுக்காறாமை


"அழுக்காறாமை" என்பது பொறாமையின்மை எனப் பொருள்படும். அழுக்காறு பிறன் ஆக்கம் கண்டு பொறாதிருத்தல். அழுக்காறு அழுக்கறுத்தல் என்னும் இரண்டு சொற்களும் ஒரு பொருளனவே. இவ் அழுக்காறாமை, அதாவது பொறாமையின்மை மக்களாகப் பிறந்தார் இன்றியமையாது கொள்ள வேண்டுவது. இதுபற்றி "அழுக்காறாமை" என்னும் பெயரோடு தமிழ்ப் பேரற நூலாகிய வள்ளுவர் குறளில் ஒரு அதிகாரம் மிளிர்கின்றது.


ஒழுக்க நெறியாக அழுக்காறாமையைக் குறிக்கின்றார் வள்ளுவனார். பொறாமை கொள்ளும் ஒருவன் ஒழுக்கங் காத்தவனாகான் என்பது அப்பெரியார் கருத்து. “ஒழுக்காறாக் கொள்க ஒருவன் தன்நெஞ்சத் தழுக்காறிலாத இயல்பு" என்பது குறள். மேலும் "அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா வியன்ற தறம்" என்றபடி அழுக்காறாதிய நான்கும் நீங்கிய செயலே அறச் செயல்.


ஒருவன் அழுக்காறு கொள்வானானால் அவன் ஆற்றும் அறம் அறமாகாது. வள்ளுவரின் மருவ வேண்டிய இப் பொன்னுரைகளை மக்கள் ஒருவி விட்டார். இந்நாள் அழுக்காறு கொள்ளா மக்கள் அருமை! அருமை!!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/65&oldid=1309129" இலிருந்து மீள்விக்கப்பட்டது