பக்கம்:குற்றால வளம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

57

 கல்வியிற் பெரிய ஒருவனைக் கண்டு அதில் குறைந்தோன் அழுக்காறு கொள்கின்றான், செல்வத்திற் சிறந்தவனைக் கண்டு அதிற் குறைந்தோன் அழுக்காறு கொள்கின்றான். செல்வாக்குப் பெற்றவனைக் கண்டு அது பெறாதோன் அழுக்காறடைகின்றான். வனப்புடையானைக் கண்டு அஃதிலாதோன் அழுக்காறெய்துகின்றான். ஒரு தொழில் வல்லவனைக் கண்டு மற்றொரு தொழிலாளி அழுக்காறடை கின்றன். ஒரு வியாபாரியைக் கண்டு பிறி தோர் வியாபாரி அழுக்காறடைகின்றான். இங்ஙனமே உலகில் எல்லா மக்களும் தங்கள் உள்ளத்தை அழுக்காற்றின் நிலைக்களனாக்கிக் கொண்டிருக்கின்றனர். அறிஞருள்ளும் பலர் அழுக்காற்றை விட்டாரில்லர்; ஒருவன் ஆக்கங் கண்டால் பொறுக்கின்றாரில்லர் ; ஒருவன் மேலோங்கி வருவானனால் அவனை மேலும் உயர்த்த வருபவரைக் காணவில்லை; அவனைத் தள்ளித் தான் ஏறிக்கொள்ளவே விரும்புகின்றனர். பொது மக்கட்கு ஊழியம் புரிவதாக வெளிவரும் மக்களிடை அழுக்காறில்லையோ? அவர்களிற் பலர் பெரிதும் அழுக்காறுடையாராக விருக்கின்றனர். ஒரு இயக்கத்தில் சேர்ந்தவருள் ஒருவர் பெயர் விளக்கமாகிவிடக் கூடாதென்று மற்றவர் எண்ணுகின்றார். இங்ஙனமே எல்லோரும் கருதுகின்றார். அழுக்காறு தன் முழு ஆட்சியையும் இந்நாள் யாண்டும் செலுத்தி வருகிறது. அதற் கடிமைபட்டுவிட் டார் மக்கள். அழுக்காறு கடந்தவரென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/66&oldid=1309162" இலிருந்து மீள்விக்கப்பட்டது