பக்கம்:குற்றால வளம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

அழுக்காறாமை


மதிக்கப்படும் சிலரும் அவர்களிடத்து அணுகிப் பார்க்குங்கால் அதனை நிறைய உடையவர்களாகவே காண்கின்றனர். அம்மம்ம! என்னே அழுக்காறு செய்யுங் கொடுமை!


அழுக்காறடைவோர் முன்னேறுதல் அருமை. அவர் பிறவிப் பயனையடைய மாட்டார். அதனாற்றான் அழுக்காறு கேட்டைத் தருவது என்றருளினர் வள்ளுவர் பெருமான். அழுக்காறு, பலப்பல தீமைகளை நல்கும்; அறிவை யழித்துவிடும்; திறமையைத் தேய்த்து விடும்; வாய்மையை மடித்துவிடும்; அறத்தை அகற்றிவிடும்; பொருளைப் போக்கிவிடும்; இன்பத்தை எரித்துவிடும்; வீட்டை விலக்கிவிடும்; இதுபற்றித் தெய்வப் புலமைத் திருவள்ளுவனார் கூறிய ஆணித்தரமான குறள்கள் வருமாறு:-


"அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத் தீயுழி யுய்த்து விடும்' "

"அவ்வித் தழுக்காறுடையானைச் செய்ய வள் தவ்வையைக் காட்டி விடும்"

"கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப் பதுஉ முண்பது உ மின்றிக் கெடும்"

"அழுக்காறுடையார்க் கதுசாலும் ஒன் னார் வழுக்கியுங் கேடீன் பது”

"அறனாக்கம் வேண்டாதா னென்பான் பிறனாக்கம் பேணாதழுக்கறுப் பான்"

இக் குறள்களைக் காட்டினும் வேறு என்ன கூறுதல் வேண்டும்? இதற்கு மேல் என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/67&oldid=1309203" இலிருந்து மீள்விக்கப்பட்டது