பக்கம்:குற்றால வளம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

59

 தான் கூறமுடியும்? அந்தோ! இத்துணைக் கேட்டை நல்கும் அழுக்காற்றை ஏன் செய்து மக்கள் அழிகின்றனர்! "அழுக்காற்றைச் செய்து பெரியாராயினாருமில்லை; அதனைச் செய்யாது பெருமை குறைந்தாருமில்லை" என்னும் பொருள்படக் கூறும், "அழுக்கற் றகன்றாருமில்லை யஃதிலார் பெருக்கத்திற்றீர்ந்தாருமில்” என்னும் குறளை யுணர்ந்தவருமா அழுக்காறு செய்தழிதல் வேண்டும்? படிப்பு வேறு: செயல் வேறாகத்தானே இருக்கிறது. கற்றபடி யொழுக எல்லோரும் முந்தின் உலகில் மறங்குறைந்து தேய்ந்து விடுமன்றோ? கல்வி கல்லாரைக் காட்டினும் கற்றவர் எந்தத் தீயவற்றையும் விட்டவராகக் காணவில்லை. புத்தகங்களில் படிக்கின்றனர். ஆனால் செய்கையிற் சிறிதும் இல்லை.


"அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத் தீயுழி யுய்த்துவிடும்"


என்ற குறளைப் படித்தோரில் அழுக்காற்றை விட்டவர் எத்துணைபேர்? மற்றவரைக் காட்டினும் கற்றாரே அழுக்காற்றை மிகுதியுங் கொண்டவராக விருக்கின்றனர். கல்வி கல்லாரிற் கற்றும் அறிவில்லார் கடையரன்றோ? எதுவும் செய்கைக்கு வந்தாலன்றிப் பயனேது? செய்கையில்லாது எல்லாவற்றையும் அறிந்துகொண்ட ஒருவனுக்கும் குங்குமஞ் சுமந்த கழுதைக்கும் வேற்றுமையுளதோ? அவனுக்கும் பொருள்காக்கும் பேய்க்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/68&oldid=1309232" இலிருந்து மீள்விக்கப்பட்டது