பக்கம்:குற்றால வளம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

அஞ்சாமை

 கடன் மறந்து வாழ்ந்து மாண்ட பல்லோர் நினைவு நமக்கு வருகிறதோ? இல்லையே. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்களைக்கூட நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவர்களை நினைக்கும்படி நம்மைத் துண்டுவது எது? அவர் வீரவாழ்க்கை-அஞ்சாமைவாழ்க்கை யன்றோ? அவர்கள் உடல் போயினும் புகழ் போகவில்லை. அது இவ்வுலக முள்ளளவும் மதி இரவி உள்ளளவும் அழியாது. இராமபிரான் என்றொரு வீரன் வாழ்ந்தான் இப்பெரு நாட்டில் என்பதை நாம் அறிவோம். அவன் எத் துணை ஆண்டுகட்கு முன்னிருந்தவன்! அப் பெரியோனைப்பற்றி நாம் இன்னும் பேசுகின்றோம்; அவன் சரித்திரத்தை நாம் படிக்கின்றோம்! வீரர்கட்குச் சரிதம் எழுதி வைப்பது அவ்வாறு அனைவரும் வாழவேண்டுமென்பதற்காகவல்லவா? இராமன் எவ்வாறு வாழ்ந்தான்? அவனுக்கு அச்சமென்பது கனவினும் உண்டோ? அவன் கடமையின் பொருட்டுக் துய்த்த துன்பங்கள் கொஞ்சமோ? சக்ரவர்த்தி திருமகனாகிய அவன், தன்னிலும் சிறிய இரண்டு பேரோடு கடுங்கானில் தனிவாழ்ந்தானன்றோ? அவனச்சங் கொண்டிருப்பனேல் புகழ் பெற்றிருக்க முடியுமோ?


அருச்சுனனைப்பற்றி - வீமனப்பற்றி நன்றாக அறிகிறோம். பாரதம் இராமாயணம் எல்லோருக்கும் தெரியுமாதலின் இவற்றைக் குறிப்பிடுகிறேன். இன்னும் அஞ்சாமை தாங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/77&oldid=1310304" இலிருந்து மீள்விக்கப்பட்டது