பக்கம்:குற்றால வளம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

69

 கிய வீரர்கள் எண்ணற்றர் சரிதங்கள் உலகில் இலங்குகின்றன. எல்லாவற்றையும் காட்டுதல் முடியாது.


அப்பர் சுவாமிகள் இருந்தார்கள். அவர் அஞ்சா நெஞ்சுடை வீரான்றோ? அவர் காதையில்-அப்பெரியார் பாக்களில் அஞ்சாமை வழிந்தோடுகின்றது. அவர் படைகொண்டவரல்லர்; அஞ்சா உளங்கொண்டவரே, அஞ்சாமைக்குப் படை வேண்டாம்; பலமான உடல் வேண்டாம்; வலிய உளமே வேண்டும். அப் பெரியார், திருப்பாட்டுக்கள் அவர் அஞ்சாமையை உணர்த்தும். திருநாவுக்கரசடிகளின் "நாமார்க்குங் குடியல்லோம்" ஆதி பாக்களின் பொருளை நன்றாக உளத்தில் பதித்து வைத்துக் கொள்தல் வேண்டும். அஞ்சாமைக்கு இற்றைக்குச் சில்லாண்டு முன்னர் உடல்நீத்த தமிழருங் கவியாகிய பாரதியார் பாடிய சிலவற்றைக் கீழே தருகிறேன்:


அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
துச்சமாக வெண்ணி நம்மைத் தூறுசெய்தபோதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பிச்சைவாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
இச்சை கொண்ட பொருளெலா மிமுந்து விட்ட போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/78&oldid=1310312" இலிருந்து மீள்விக்கப்பட்டது