பக்கம்:குற்றால வளம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

வகுப்பு

வகுப்பு

வகுப்பு என்ற சொல்லுக்குப் பிரிக்கப்படுவது என்பது பொருள். பிரிக்கப்படுவது எது எது உண்டோ அவ்வனைத்தும் வகுப்பு என்று பெயர் பெறும். இவ்வாறு பிரிக்கப்பட்ட்து பலப்பல. மயிரை வகிர்ந்து கொள்வதை வகுப்பு என்று வழுத்தக் கேட்கின்றோம். ஒன்றாக இணைந்திருக்கும் மயிரை இருபிரிவாகப் பிரிப்பதையே வகுப்பு என்று வழுத்துகின்றோம். பிரிக்கப்பட்டது என்ற பொருளிலேயே இது வகுப்பு என்று பேசப்படுகிறது.


பள்ளியில் பிள்ளைகளைப் படிப்புக்கொண்டு பிரிப்பதை வகுப்பு என்று உரைக்கின்றோம். இதுவும் பிரிக்கப்படுவதினாலேயே வகுப்பு என்ற பெயர் பெறுகிறது.


வகுப்பு என்று இங்கு எடுத்துக்கொண்டது ஜாதி பற்றியே யாகும். இந்த ஜாதி, வகுப்பு என்னும் பெயர் பெற்றமையினாலேயே இது பிரிக்கப்பட்டது என்பது கிடைக்கின்றது. பிரிக்கப்பட்டது என்றால் யாரால் பிரிக்கப் பட்டது என்ற வினா எழலாம். ஒரு சாரார் கூட்டுறவு கருதி மக்களாலேயே பிரிக்கப்பட்ட தென்று உரைப்பர். பிறிதோர் கூட்டத்தார் கடவுளால் பிரிக்கப்பட்டது எனக் கழறுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/89&oldid=1315834" இலிருந்து மீள்விக்கப்பட்டது