பக்கம்:குற்றால வளம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

81

 இன்னொரு குழுவினர் இது பிரிக்கப்பட்டதேயல்ல; படைப்புக் காலத்திலேயே இறைவனால் படைக்கப்பட்டது ஜாதி என இயம்புவர். இவர் கூற்று ஏற்குக் தரத்ததன்று. வகுப்பு என்ற பெயருண்மை இக் கூற்றை மறுக்கும். வகுப்பு வகுக்கப்பட்டதே என்பதில் தடையில்லை.


கடவுள் படைப்புக் காலத்திலேயே வகுப்பு வகுத்தார் என்று கூறுதல் பொருத்தமின்று, படைப்புக் காலமென்று தனியே ஒரு காலமில்லை. கடவுள் எப்படி அநாதியோ அது போல உலகமும் அநாதி. ஆன்மாக்களும் அநாதியே. உலகத்தைக் கடவுள் படைக்க வில்லை. ஆன்மாக்களையும் அவர் படைக்க வில்லை. உலகமும் ஆன்மாக்களும் தோற்றமும் அழிவும் இல்லாதன. இவற்றைக் கடவுள் உண்டாக்கினார் என்றல் ஒர் உபசாரமான மரபேயன்றி உண்மையன்று. ஆனால் இவற்றைக் கடவுள் படைத்தாரென்றே நாம் கழறுகின்றோம். இதை ஒரு மரபாக வைத்துக் கொண்டிருக்கிறோம். சான்றாக ஒன்று கூறுவேன். வேதங்களை எடுத்துக் கொள்வோம். வேதங்கள் அநாதி என்று ஒரு பிரிவார் பேசுவர்; அவை இறையால் இயம்பப்பட்டன என ஒரு பகுதியார் பகர்வர்; அவை அறிஞர்களால் ஆக்கப்பட்டன என ஒரு கூட்டத்தார் கூறுவர். அது எவ்வாறாயினும் ஆக. அச்சங்கை ஈண்டு வேண்டாம். வேதங்கள் அனைத்தையும் வியாசர் என்பார் விளம்பினார் என்று கூற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/90&oldid=1315843" இலிருந்து மீள்விக்கப்பட்டது