பக்கம்:குற்றால வளம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

வகுப்பு

தொழில் வேற்றுமையால்" என்று நமது பெரியாரும் பேசினார். பிறப்பினாலே வகுப்பு என்பது கிடையாது. பிறப்பிலே உயிர்கள் அனைத்தும் ஒக்கும். வேறுபாடெல்லாம் சிறப்பிலேதான்.

ஒவ்வொருவரும் பிறக்கும் பொழுதே வகுப்பு வகுப்பாகப் பிரிந்து பிறக்கவில்லை. தொழில் பற்றித்தான் ஒருகாலத்தில் வகுப்பாக வகுக்கப் பெற்றர்கள். அந்நாள் வகுப்பு வகுத்தவர் நன்னோக்கங் கொண்டே வகுத்திருத்தில் வேண்டும். இந்நாள் அது விபரீதமாக வந்துவிட்டது. ஒருகாலத்தில் அறமாக வகுக்கப்பட்ட ஒன்று நாளடைவில் மறமாக மாறுவது இயல்பு. பிறகு அது சீர்திருத்தப்படல் வேண்டும். சீர்திருத்தக்காரர்க்கு இவ்வுலகில் ஒருநாளும் ஒய்வு கிடையாது. இவ்வுலகம் உள்ளளவும் சீர்திருத்தம் நடந்துகொண்டே இருக்கவேண்டுவதே. ஒருகாலத்தில் சீர்திருத்தியது அப்படியே நிலைத்திருப்பது உண்மையானால் பிறகு நாட்டில் பெரியவருக்கு வேலையில்லை. ஒவ்வொன்றும் முன்னே எத்துணையோ பெரியோரால் சீர்திருத்தப் பெற்றதாகவே இருக்கும். நாளாக் நாளாகத் திரும்பவும் அது சீர்திருத்தம் செய்யப்படவேண்டிய நிலையை அடையும். ஒரு அறத்தைத் திருத்தி யமைத்துவிட்டால் இனி அது செவ்வனே நடந்தேறும் என்று எண்ணியிருத்தற்கு இல்லை. அதனே என்றும் கண் காணித்தே வரல்வேண்டும். நாளடைவில் அவ்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/95&oldid=1534953" இலிருந்து மீள்விக்கப்பட்டது