பக்கம்:குற்றால வளம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

87

 அறத்தில் நேரும் மாற்றங்களை யெல்லாம் புதுக்கிக்கொண்டே வரல் வேண்டும்.

இந்நாள் வகுப்பு, சிறிதும் பொருளற்ற முறையில் கொள்ளப்பட்டு வருகிறது. இது புதுக்கப்படல் வேண்டும். அவ்வுண்ம்மையை மக்கள் நன்றாக உணரவேண்டும். வகுப்பு வகுக்கப்பட்டது -அதாவது ஜாதி பிரிக்கப் பட்டது இன்ன காரணங்கொண்டு என்ப்தை மக்கள் அறியவில்லை. ஒருவனுக்குப் பிறந்தவன் அவ்வகுப்பு என்றே கொள்ளப்படுவது மரபாகிவிட்டது. அவன் செய்யும் தொழில் என்ன என்பது நோக்கப்படவில்லை. பிறப்புப்பற்றியே வகுப்புப் பேசப்படுகிறது. வகுப்புப் பிரிக்கப்பட்டதன் நோக்கத்திற்கும் இந் நாள் கொள்ளப்படும் வகுப்பிற்கும் சம்பந்தம் சிறிதும் இல்லை.

வகுப்பு வகுத்த காலத்தில் நான்கு பெரும் பிரிவாக வகுக்கப்பட்டதாக அறிகிறோம். நான்கு பிரிவையும் வடநூலார் பிரம, ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என வழுத்துவர், நமது தொல்காப்பியர் முதலிய தொல்லாசிரியர்கள் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் எனச் சொல்லினர். இவ்வாறாக நான்கு வகுப்பே தொடக்கத்தில் வகுத்தார்கள். இப்பொழுது இத்துணை வகுப்புக்கள் என்று எண்ணிச் சொல்ல முடியா நிலையில் அத்துனே வகுப்புக்களிருக்கின்றன. என்றாலும் இந்நான்குக்குள் எல்லாவற்றையும் பொருத்தி அடக்கிவிடலாம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/96&oldid=1534954" இலிருந்து மீள்விக்கப்பட்டது