பக்கம்:குற்றால வளம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

வகுப்பு

வகுப்பெனக் அதற்குப் பொருள் இல்லை. தீண்டக் தகாதாரென்று கூறப்படுவோர் வகுப்பிற் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஒருவனைப் பிராமணன் என்று எவ்வாறு கொள்ளமுடியும்? எவரெவர் தீண்டத்தகாத நிலையில் இருக்கின்றாரோ அவரெல்லாம் தீண்டத்தகாக வகுப்பைச் சார்ந்தவர் என்று தள்ளி விடுதல் ஒழுங்கு சான்றாக ஒன்று காட்டுகிறேன். திருக்கோயில்களில் சுயம்பாகி என்ற ஒரு வகுப்பார் இருக்கின்றனர். அவர்களை நீங்கள் அறிந்தே இருப்பீர்கள். அவர்களுடைய உருவத்தையும் உடலில் வழியும் வியர்வையையும் தோளில் தொங்கும் அழுக்குத் துண்டையும் கண்ணால் கண்டவர் அவர்களைத் தீண்டக் கனவிலும் கருதுவரோ? அவரும் அவரனையாருமே தீண்டத்தகாதார். அந்நாள் இன்னோரன்ன தீண்டமுடியா நிலையிலிருந்தவரே தீண்டத்தகாதாரென ஒதுக்கப்பட்டாரன்றி வேறன்று.

இன்று தீண்டத்தகாதரென யார் கருதப் பட்டிருக்கிறார்கள்? பிறப்பைப்பற்றி ஒரு பெருங்கூட்டத்தார். இது எவ்வளவுபேதைமை! ஒருவருக்குப் பிறந்தமையினாலே தீண்டத்தகாதாராக எப்படி ஆக முடியும். இந்நாள் தீண்டத்தகாதாரென ஒதுக்குங் கூட்டத்துள் அறவோர் உளர். வேறு வகுப்புக்களில் தீண்டத் தகாதாருளர் என்று செப்பவேண்டுவதின்று.

வகுப்புப் பிறப்புப்பற்றி என்பதை அறவே தொலைக்கவேண்டும். தொழில்பற்றி வகுக்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/99&oldid=1534957" இலிருந்து மீள்விக்கப்பட்டது