பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


பழக்கத்தை, நன்கு அறிந்து வைத்துக் கொள்வது, சிறந்த மனிதராக எதிர்காலத்தில் உருவாக்கி விடும்.

7.2.6. ஏதாவது ஒரு காரணத்தால், உணவு முழுவதையும் சாப்பிட முடியவில்லை என்றால், அதற்காக அதனைக் கண்ட இடத்தில் தூக்கியெறிவது அறிவார்ந்த செயல் அல்ல, அருகில் உள்ள குப்பைத் தொட்டிகளில் தூக்கியெறிவது அல்லது அங்கே உள்ள குப்பை போடும் இடம் பார்த்து போடுவது நல்ல முறையாகும்.

7.3. உடற்பயிற்சிப் பழக்கம்

7.3.1. தங்களுக்குரிய வயதுக்கு ஏற்ப உள்ள விளையாட்டுக்களில் மட்டுமே, குழந்தைகள் பங்கு பெற்று விளையாடி மகிழ வேண்டும்.

7.3.2. வேலை எப்போது, படிப்பு எப்போது, விளையாட்டு எப்போது என்பதையெல்லாம் திட்டம் போட்டு, அதன்படி செயல்பட வேண்டும்.

7.3.3. பத்திரமான இடத்தில், ஆபத்து ஏதும் ஏற்படாது என்கிற இடத்தில் தான் விளையாடவேண்டும். விபத்து நிகழாமல். விளையாடக் கற்றுக் கொள்ள வேண்டும்.

7.3.4. விளையாடுவது உடல் ஆரோக்கியத்திற்காக, மனதில் மகிழ்ச்சி ஏற்படுவதற்காக விளையாடிய பிறகு களைத்துப் போவதும், மனம் கஷ்டப்படுவதும் தவறு. அதற்குப் பெயர் விளையாட்டே அல்ல. ஆகவே,