பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


கூடாது. குளம் குட்டை இடங்களில் இறங்கிப் பார்க்கிறேன் என்று குளிக்க முயலக்கூடாது.

7.4.3. எப்பொழுது வீதிகளில் நடந்தாலும், ஒரமாக நடைபாதையின் மீது தான் நடந்து செல்ல வேண்டும்.

7.4.4. வீதிகளில் அல்லது வீதி ஓரங்களில் விளையாடுவது தவறு. அவை பாதுகாப்பான இடங்கள் அல்ல.

7.4.5. மின்சாரம் - இது தொடர்பான எந்தப் பொருளையும் தொடுவதோ, அவற்றுடன் விளையாடுவதோ, உயிருக்கே ஆபத்தை விளைவிப்பதாகும்.

7.4.6 கூரிய கத்தி, கத்தரிக்கோல், பிளேடுகள், உடைந்த கண்ணாடித் துண்டுகள் இவற்றை வைத்துக் கொண்டு விளையாடக் கூடாது.

7.4.7. ஒடும் போது, தாண்டும் போது, விளையாடும் போது மிகவும் எச்சரிக்கையுடனும், நிதானத்துடனும் செய்வது நன்மை பயக்கும்.