பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


1.கைகளை கீழ்ப்புறமும் பின்புறமும் சுழற்றி வீசியவாறு (நாற்காலியில் அமர்வது போன்ற பாவனை) முழங்கால்களை அரை அளவு மடித்துக் குந்து.

2.கைகளை மேற்புறமாக விரைந்து வீசி, (மேலே உள்ள ஒரு பொருளை எட்டித் தொடும் பாவனை) மேலே எழும்பிக் குதி.

(35) பயிற்சித் தொடக்கம்

இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு முழங்கால்களை முழுவதும் மடித்துக் குந்து.

1.ஒன்று முதல் நான்கு எண்ணிக்கை வரை, நான்கு முறை முன்புறமாகக் குதித்து சென்று, பிறகு பின்புறமாகவே நான்கு முறை குதித்து வா(Return)

2.முன் போல நில் (கைகள் தரையில் தொட்டுக்கொண்டிருப்பது போல குந்தியிரு)

(36) பயிற்சித் தொடக்கம்

1.கைகளை (அழுத்தி) ஊன்றியபடி, கால்களை பின்புறமாக நீட்டு.

2.கைகளும் நெஞ்சும் (Chest) தரையைத் தொடும்படி வளை.

3.முன் மாதிரியே இரு.