பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

31


தன் வால் பறிபோகாமல் காத்துக்கொண்டு, பிறர் வால்களைப் பறிக்கும் கெட்டிக்காரத்தனம் இந்த விளையாட்டில் மெருகேறுகிறது.

இந்த விளையாட்டை இன்னொரு முறையிலும் விளையாடலாம்.

குழந்தைகளை சரிசம எண்ணிக்கையில் 4 குழுவாகப் பிரிக்கலாம்.

ஒவ்வொரு குழுவையும் ரயில் எஞ்சின் பெட்டிகள் போல, இடுப்பைப் பிடித்துக் கொண்டு நிற்க வைத்து, முதலில் நிற்பவரை தலை என்றும், கடைசியில் நிற்பவரை வால் என்றும் கூறவேண்டும்.

ஆசிரியரின் விசில் ஒலிக்கு பிறகு, ஒவ்வொரு குழுவின் தலையாக இருப்பவர், மற்றக் குழுவின் வாலாக இருப்பவரைப் போய் தொட வேண்டும். ஒருவரை ஒருவர் பிடித்திருக்கும் பிடிவிடாமல், சங்கிலிமுறை அறுந்து போகாமல், எல்லோரும் ஒன்று சேர்ந்தே ஓடவேண்டும்.

மற்றக் குழுவினர், தமது வாலைத் தொட்டுவிடாமல், அதே சமயத்தில் மற்றவர் வாலை தாங்கள் பறிக்கிற வேலையை, துரிதமாகச் செய்ய வேண்டும்.

கடைசி வரை, தன் வாலை இழந்து விடாமல் காத்துக் கொண்டு, மற்ற வால்களில் அதிகமான