பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


தினந்தோறும் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். செய்தாக வேண்டும்.

அதன்படி, நிமிர்ந்து நிற்கும் தோரணை, நிமிர்ந்து உட்காரும் நிலை, நிமிர்ந்து உட்கார்ந்து படித்தல், எழுதுதல், சுமை ஏதாவது தூக்கும் போதும் நிமிர்ந்த உடல் கொள்ளுதல்.

(மேலே கூறிய பழக்கங்களையெல்லாம் , குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் கற்றுத் தரல் வேண்டும். செய்யுமாறு தூண்ட வேண்டும். செய்திடத் துணைபுரியவும் வேண்டும்.)

7.2.2. சுற்றுப்புற சுகாதாரம்
(Environmental Hygiene)

குழந்தைகள் தாங்கள் இருக்கும் இடங்கள் எதுவாக இருந்தாலும், அங்கெல்லாம் சுத்தமாகவும் துய்மையாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்வதே, சுற்றுப்புற சுகாதாரம் என்று சொல்லப்படுகிறது,

1. வீட்டில், தான் இருக்கும் அறையை சுத்தமாக வைத்துக்கொள்வது.

2. வகுப்பறையை சுத்தமாகப் பார்த்துக் கொள்வது.

3. மற்ற சிறுவர்களையும் வகுப்பறைக்குள் கிழிந்த பேப்பள், வேண்டாத குப்பைப் பொருட்களை, கண்ட இடத்தில் எறியாமல், தடுப்பது குறிப்பிட்ட குப்பைத் தொட்டியில், கொண்டு போய் போடச் சொல்வது.