பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

53


இத்தகைய ஓய்வையும் பொழுதுபோக்கையும், நல்ல பயனுள்ள காரியங்களாகக் கண்டுணர்ந்து, பின்பற்ற வேண்டும்.

உறக்கம் என்பது உடலுக்கு ஓய்வும், மனதுக்கு அமைதியும் கொடுப்பதாகும். குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 8-10 மணி நேரமாவது உறக்கம் வேண்டும். உறக்கத்தின் போது, தேய்ந்து போன திசுக்கள் புதுப்பிக்கப்படுகின்றன. பழுதான திசுக்கள் பராமரிக்கப்படுகின்றன.

சுத்தமான படுக்கையில், காற்றோட்டமான இடத்தில், உறங்க வேண்டும்.

தினமும் குளிக்க வேண்டும். உடலிலுள்ள தோலின் அழுக்கைப் போக்கித் தூய்மைப்படுத்த, சோப்பினை பயன்படுத்த வேண்டும். குளிர்ந்த நீரில் குளிப்பது, உடலுக்கு நல்ல சுறுசுறுப்பை அளிக்கும்.

குளித்த பின், அழுக்கில்லாத ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். 'கந்தையானாலும் கசக்கிக்கட்டு' என்ற பழமொழி ஒன்று இருக்கிறது.

உடற்பயிற்சி தான் உடல் உறுப்புக்களை பதப்படுத்துகின்றன. பலப்படுத்துகின்றன. பாங்காக வேலைகளைச் செய்து பரிமளிக்கச் செய்கின்றன. அதனால்