பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

ஆரம்பப் பள்ளிகளில்தான், குழந்தைகள் படிக்கின்றார்கள். அங்கே, உடற்பயிற்சி அளிக்க, விளையாட்டுக்களைத் திட்டமிட்டுக் கற்றுதர, உடற்கல்வி ஆசிரியர்கள் யாரும் இல்லை, விளையாடும் இடங்கள் போதிய அளவு இல்லை. தரும் பாடதிட்டமும் உரிய முறையில் இல்லை.

குழந்தைகளுக்கு கற்றுத் தர உதவுகின்ற விளையாட்டுத் துறை நூல்களும் தமிழில் இல்லை. இந்தக் குறையைப் போக்க, முதல் நூலாக, புதிய அமைப்பாக, இந்த நூல் வெளிவருகிறது.

அகில இந்திய அளவில், அறிஞர்கள் கூடி, கலந்துரையாடி, தயாரித்துத்தந்துள்ள பாடத் திட்டத்திற்கேற்ப, இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது.

குழந்தைகள் மகிழ்ந்து விளையாட, கூடி உறவாட, சிரித்துமகிழ, சிறந்து திகழ, இந்த நூலில் கூறப்பட்டுள்ள உடற்பயிற்சி களும், விளையாட்டுகளும் நன்கு உதவும்.