பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


4.4. தலைவரைக் காப்பாற்று (Save the Leader)

விளையாட வந்திருப்பவர்களில் ஒருவரைத் தலைவராகவும், அவருக்குத் தொண்டர்களாக 4 பேர்களையும், முதலில் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆட்டம் தொடங்கிய உடனே, மீதியுள்ள மற்ற ஆட்டக்காரர்கள் எல்லோரும், தலைவரை விரட்டித் தொட முயல வேண்டும்.

தன்னை யாரும் தொட்டு விடாமல் இருப்பதற்காக, தலைவர் ஆடுகளம் முழுவதுமாக ஓடுவார். அவரைக் காப்பாற்ற, மற்ற நான்கு தொண்டர்களும் ஓடுவார்கள்.

இனி ஓட முடியாது என்று களைத்துப்போன தலைவர், என்னைக் காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டுக் கத்தியவுடன், நான்கு தொண்டர்களும் ஓடி வந்து, அவரைச் சுற்றி வட்டமாக நின்று கொண்டு, தொட வருகிற மற்றவர்களைத் தூரமாகத் தள்ளிவிட்டு, தங்கள் தலைவரை யாரும் தொடமுடியாதபடி, தடுப்பார்கள்.

இனி தடுக்க முடியாது என்ற நிலை வந்தவுடன், தலைவரும் தொடப்படுவார் என்ற கட்டம் ஏற்பட்டவுடன், தலைவர் தன் தலை மீது கை வைத்துக் கொண்டு, தரையில் உட்கார்ந்து விட வேண்டும். அப்பொழுது யார் தொட்டாலும் தலைவர் அவுட் ஆகமாட்டார்.