பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


வட்டத்திற்கு வெளியே போனவர் அல்லது உயர்த்தியிருந்த ஒரு காலை தரையில் ஊன்றியவர். அல்லது கட்டியிருந்த கைப்பிடியை விட்டுவிட்டவர், போட்டியில் தோற்றவராகிறார்.

6.3 நொண்டி வாத்துச் சண்டை (Lame Duck Fight)

இரண்டு பேர், நொண்டி வாத்துக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

3 அல்லது 5 அடி விட்டமுள்ள வட்டம் ஒன்றையும் போட்டுக்கொள்ள வேண்டும்.

நொண்டி வாத்தாக இருக்கும் நிலை.

வாத்தாக இருப்பவர், தனது இடது காலை முன்புறமாக நீட்டி, இரண்டு கைகளாலும் இடது காலைக் (குனிந்து) பிடித்துக் கொண்டு, தமது வலது காலில் மட்டுமே, நிற்க வேண்டும்.

சண்டை போடுங்கள் என்று சைகை கிடைத்தவுடன், அவர்கள் ஒருவரை ஒருவர் முட்டி மோதி, இடித்துத் தள்ளி, (வாத்து நிலையிலிருந்து இரண்டு கால்களையும் தரையில் ஊன்றிக் கொள்ளுமாறு, தள்ளிவிட வேண்டும். அல்லது வட்டத்திற்கு வெளியே போய் விழுமாறு தள்ளி விட வேண்டும்.